
மாஸ்கோ,
ரஷிய நாட்டின் துணை பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தவர் தைமூர் இவானாவ். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவ மந்திரியாக இருந்த செர்ஜி ஷொய்குக்கு வலதுக்கரமாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வரும்நிலையில் போரை பயன்படுத்தி ராணுவத்துக்கு செலவு செய்யப்பட்ட பணத்தை இவர் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தைமூர் இவானாவின் பதவி பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த ஊழல் வழக்கு தொடர்பாக மாஸ்கோ கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. ரூ.427 கோடி (50 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஊழல் செய்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து தைமூர் இவானாவுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.