ஊறுகாய் தகவல்கள்

1 week ago 6

நன்றி குங்குமம் தோழி

மாங்காய் சீஸன் வருவதால் எல்லோரும் மாங்காய் ஊறுகாய் போடுவோம். எலுமிச்சை, பாகற்காய் மற்ற காய்களிலும் ஊறுகாய் செய்யலாம். அது பற்றி சில டிப்ஸ்…

* கடையில் வாங்காமல் வீட்டிலேயே ஊறுகாய் செய்தால் செலவும் குறையும். நம் விருப்பப்படி செய்யலாம். சுத்தமாகவும் இருக்கும்.

*ஊறுகாய்களுக்கு பாதி பழுத்த காய்களையே பயன்படுத்த வேண்டும்.

* ஊறுகாய் வைக்க கண்ணாடி பீங்கான் ஜாடிகளையே பயன்படுத்தினால் கெட்டுப் போகாமல் இருக்கும்.எவர்சில்வர், பிளாஸ்டிக், அலுமினியம் பாத்திரங்களில் வைத்தால் ஊறுகாய் கெட்டுப் போகும். பாத்திரங்களும் ஓட்டையாகிவிடும். மரக்கரண்டியே பயன்படுத்த வேண்டும்.

* காற்றுப்புகாமல் இறுக மூடிவைக்க வேண்டும்.

* ஊறுகாய்க்கு கடுகெண்ணெய், கல் உப்புதான் பயன்படுத்த வேண்டும்.

* ஊறுகாய் ஜாடியின் உட்புறத்தை சூடான எண்ணெயில் நனைத்த துணியால் முதலில் துடைத்துவிட்டால் பூசணம் பிடிக்காது.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

The post ஊறுகாய் தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article