வேலூர், ஏப்.25: வேலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 23 ஊர்க்காவல்படை இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதி அர்ச்சனா, ஆயுதப்படை டிஎஸ்பி ஜெயகுமார் மற்றும் எஸ்ஐ பெருமாள் ஆகியோர் விண்ணப்ப விநியோகத்ைத தொடங்கி வைத்தனர். முதல் நாளான நேற்று ஏராளமான ஆண், பெண்கள் விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர்.
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். மாத ஊதியம் கிடையாது. பணி நாட்களுக்கு உண்டான தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். 45 நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை வாங்கிய நாளிலிருந்து 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யும் குழுவினர் மூலம் ஊர்க்காவல்படை பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப உரிய தேர்வை நடத்தி, தகுதியுள்ள தேர்வாளர்களுக்கு பணியமர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது டிஎஸ்பி பங்கேற்பு ேவலூரில் appeared first on Dinakaran.