ஊராட்சி மன்ற தலைவர்களிடம் விளையாட்டு உபகரணம் வழங்கல்

3 months ago 18

ஏழாயிரம்பண்ணை, அக்.15: தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விளையாட்டு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் வழங்கினார். ஊரக பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டிற்காக அனைத்து ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பயன்படுத்துவதற்காக கேரம் போர்டு, சிலம்பம், வாலிபால், சதுரங்கம், பளுதூக்குதல் உட்பட 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 48 ஊராட்சி பகுதிகளுக்கு பொருட்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் லியாகத்அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ஊராட்சி மன்ற தலைவர்களிடம் விளையாட்டு உபகரணம் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article