சென்னை : ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை அல்லது சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என புதிய மசோதாவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15,000 என்ற கட்டணத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகள் உரிமம் பெறலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை வழங்கும் மசோதா தாக்கல்!! appeared first on Dinakaran.