பரமக்குடி,பிப்.23: பரமக்குடி அருகே ஊரணியில் குளிக்கச் சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார். பரமக்குடி அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேலன்(48). கடந்த 15 வருடமாக மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக அவர் வீட்டில் இல்லை. நேற்று முதலூர் கிராம ஊரணியில் அவரது சடலம் மிதப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். இது காணாமல் போன வடிவேலன் உடல் என்பது தெரிய வந்தது. சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஊரணியில் மூழ்கி விவசாயி பலி appeared first on Dinakaran.