பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளை ஒன்றிணைத்து தீர்க்கும் வகையில் மாநில அளவிலான புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சங்கத்தின் சார்பில், ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, சோழவரம், திருவள்ளூர், பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், 2000 விவசாயிகளைக் கொண்டு விரைவில் விவசாயிகள் மாநாடு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் என சங்கத் தலைவர் ஆஞ்சநேயலு தெரிவித்தார்.
அதேபோன்று, சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை, காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், விவசாயிகள் பிரபாகரன், வெங்கடாதிரி, மதன்குமார், ஞானபழனி, முனுசாமி, மோகன கிருஷ்ணன், துளசிராம், அகத்தீஸ்வரன், எத்திராஜ் லிங்கமூர்த்தி, பூபதி, சுதாகர், பிரபு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.