ஊதிய நிலுவை தொகை வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 weeks ago 2

 

பெரியபாளையம், ஜன. 22: எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர், அரசு பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட அரசு ஆணை 7வது ஊதிய குழுவின் நிலுவைத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்ட நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

இதில், கலெக்டர் நிர்ணயம் செய்த புதிய ஊதியத்தை வழங்க வேண்டும், மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு சீருடை, பேட்டரி வண்டி, கையுறை, காலணி போன்ற பணிக்கருவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று பிடிஒ குமார் உறுதியளித்தார். இந்நிகழ்வில் சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார், மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் சந்தானம், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி, மாவட்ட துணை தலைவர் குமரவேல், ஒன்றிய பொருளாளர் விஜயா, கவுரவ தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஊதிய நிலுவை தொகை வழங்கக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article