ஊட்டி,
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மிதி, துடுப்பு, மோட்டார் உள்ளிட்ட படகு சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.