ஊட்டியில் நிலம் வாங்கிய நடிகர் சிரஞ்சீவி ?

3 months ago 25

சென்னை,

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் கடந்த 1978 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியான 'பிராணம் கரீது' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஊட்டியில் நிலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள ஊட்டி, பிரபலங்கள் உள்ளிட்ட அனைவராலும் விரும்பத்தக்க இடமாக உள்ளது. அதன்படி, தற்போது அங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.16 கோடி மதிப்பில் 6 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவரது மகன் ராம் சரண் தனது மனைவியுடன் இவ்விடத்திற்கு வந்து பார்வையியிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி தற்போது, 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து வருகிறார். மல்லிடி வசிஷ்டா இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article