ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

7 months ago 22

ஊட்டி,

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. இந்த ரெயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை இன்று முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read Entire Article