ஊட்டி மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் சேவை ரத்து

3 months ago 18

குன்னூர்: குன்னூர் - உதகை இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் சீரமைக்கும் வரை தற்காலிகமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டது. என்றபோதும் வழக்கம் போல் குன்னூர் - உதகை இடையே மலை ரயில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

Read Entire Article