ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

3 weeks ago 6


ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குட்டை டேலியா, சூரிய காந்தி மலர்களை சுற்றுலா பயணிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இரண்டாவது சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலியன் பூங்கா மற்றும் பெர்ன் பூங்காவில் மலர் தொட்டிகளைக் கொண்டு சிறுசிறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் பல்வேறு வண்ண மலர் செடிகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.

இம்முறை ஜெர்பரா, குட்டை டேலியா உட்பட பல்வேறு புதிய மணல் செடிகளும் இந்த மலர் அலங்காரத்தில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக டேலியா மலர்கள் நீண்ட செடிகளில் பெரிய அளவிலான மலர்களாக காட்சியளிக்கும். ஆனால் இந்த குட்டை டேலியா மலர்கள் சிறிய செடிகளில் ஒரே ஒரு இதழ்களை கொண்டு அழகாக காட்சியளிக்கிறது. பல்வேறு வண்ணங்களில் பூத்துள்ள இந்த குட்டை டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. மேலும், இதன் அருகே வைக்கப்பட்டுள்ள குட்டை ரக சூரியகாந்தி மலர்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுமார் அரை அடி நீளம் கொண்ட தண்டுகளில் பூத்துள்ள இந்த குட்டை சூரியகாந்தி மலர்களும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வதுடன், புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article