ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!… குருதாஸ்பூரில் 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்; போலீசாரின் விடுமுறை ரத்து : பஞ்சாப் அரசு அதிரடி

4 hours ago 2

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படும்படி சுற்றும் நபர்களை சுட்டுக்கொல்ல ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பஞ்சாப் – பெரோஸ்பூர் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். எச்சரிக்கையை மீறி எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து, பஞ்சாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ளும் வகையில் பஞ்சாப் எல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் மின்சாரம் நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று நள்ளிரவு முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தினமும் இரவு 8 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், மத்திய சிறைச்சாலையில் மட்டும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் கதவு, ஜன்னல்களை பூட்டி வைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அத்துடன் நிர்வாக காரணங்களுக்காக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பாக்.-ன் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்க, இந்திய ராணுவத்துடன் காவல்துறையும் இணைந்து போராட ஆணையிடப்பட்டுள்ளது. எந்த ஒரு மருத்துவ அவசர நிலையையும் கையாள 24 மணிநேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ள பஞ்சாப் அரசு, பதான்கோட், அமிர்தசரஸ், குருதாஸ்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து பொது நிகழ்ச்சியையும் ரத்து செய்துள்ளது பஞ்சாப் அரசு. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் கொடி ஏற்ற, இறக்கத்தை ஒட்டிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

The post ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!… குருதாஸ்பூரில் 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்; போலீசாரின் விடுமுறை ரத்து : பஞ்சாப் அரசு அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article