உழவர் வாழ்வு செழிக்கட்டும்!; வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்!: துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!

4 hours ago 3

சென்னை: உழவர் வாழ்வு செழிக்கட்டும்!; வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களையும் – வேளாண்மையும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 2026 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

*கிராமப்புற வேளாண் பட்டதாரி இளைஞர்களை கொண்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்,

*நெல் சாகுபடி பரப்பளவை உயர்த்த சிறப்புத்திட்டம்,

*மழைவாழ் உழவர்கள் முன்னேற்றம்,

*உழவர் சந்தைகளில் இருந்து ஆன்லைன் முறையில் பொருட்களை டெலிவரி செய்யவும் தனித்திட்டம்,

*உழவரைத் தேடி வேளாண்மைத் திட்டம்,

*கூட்டுறவு பயிர்க்கடன் – குறுகிய காலக்கடன் வழங்க என ரூ.20,500 கோடி இலக்கு,

*வேளாண் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி,

இப்படி உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு நம் திராவிட மாடல் அரசின் வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

உழவர் வாழ்வு செழிக்கட்டும்!

வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உழவர் வாழ்வு செழிக்கட்டும்!; வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்!: துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Read Entire Article