உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

3 hours ago 3

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உரையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதிரி வகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் ரூ.1 கோடி தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி. பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடி.

தமிழ்நாட்டில் உள்ள 2,338 கிராம ஊராட்சிகளிலும் ரூ.269.50 கோடி மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் பனை மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கத்துக்கு ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ளவும் ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.215.80 கோடியில் 17,000 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.

காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும் கல்லணை கால்வாய்ப் பாசன பகுதிகளிலும் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் 2,925 கி.மீ நீளத்துக்கு தூர்வாரும் பணிகள்.

இ-வாடகை செயலி மூலம் வேளாண் எந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்க உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article