உள்ளிருப்பு போராட்டம்

2 months ago 11

 

ராஜபாளையம், டிச.10: தமிழகம் முழுவதும் உள்ள நில அளவை களப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், தற்காலிக பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும், கூடுதலாக பணிச்சுமை ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கோட்டப் பொருளாளர் ஆதிநாராயணன் தலைமையில் வட்ட துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் அனைத்து நில அளவையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நில அளவை பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

The post உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article