உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 6% சொத்து வரி உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்

6 months ago 41

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்த்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்விளைவாக, இது தொடர்பான தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது. இதேபோன்று பிற உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும். திமுக அரசின் இந்தச் செயல் கடும்கண்டனத்துக்குரியது.

Read Entire Article