உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் 346 ரன்கள் குவித்த மும்பை வீராங்கனை

4 hours ago 3

மும்பை: உள்நாட்டில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் ஒரு நாள் கோப்பைக்கான போட்டியில் மும்பை அணியின் ஈரா ஜாதவ், 157 பந்துகளில் 346 ரன் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளார். மேகாலயா – மும்பை அணிகள் இடையே நேற்று நடந்த போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய ஈரா ஜாதவ், 16 சிக்சர், 42 பவுண்டரிகளுடன் 346 ரன் விளாசினார். உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒருவர் முச்சதம் விளாசுவது இதுவே முதல் முறை. இவரது அபார ஆட்டத்தால் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 563 ரன் குவித்தது.

 

The post உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் 346 ரன்கள் குவித்த மும்பை வீராங்கனை appeared first on Dinakaran.

Read Entire Article