உளுந்தூர்பேட்டையில் செங்கரும்பு அறுவடை தீவிரம்

3 weeks ago 7

 

உளுந்தூர்பேட்டை, ஜன. 12: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திம்மிரெட்டிப்பாளையம், மயிலங்குப்பம், கிருஷ்ணா ரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டது. இந்த பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு அதிகளவில் செங்கரும்பு அரசு தரப்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மீதமுள்ள கரும்புகளின் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து கரும்பு விவசாயி முருகன் கூறியபோது, ஒரு கரும்பின் விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக கரும்புகள் சாய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு குறைந்த வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் செங்கரும்புகளை நியாய விலை கடைகளுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டையில் செங்கரும்பு அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article