உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன் - 5 பேர் படுகாயம்

5 hours ago 1

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார், படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேனின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார் என்றும் இதனால் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்துள்ளது என்றும் முதல்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.

Read Entire Article