உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம்

14 hours ago 2

 

உளுந்தூர்பேட்டை, பிப். 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு மினி லாரியில் கடலூர் மாவட்டம் முதனை கிராமத்தில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவில், பொரி வியாபாரம் செய்வதற்காக பொரி மூட்டை, மிச்சர், அல்வா உள்ளிட்ட வியாபார பொருட்களுடன் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். மினி லாரியை பீளமேடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ்(39) என்பவர் ஒட்டிச் சென்றார்.

நேற்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையின் தடுப்பு கட்டையில் மோதி மினி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சுரேஷ் மற்றும் மினி லாரியில் சென்ற வியாபாரிகள் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி(54), இவரது மனைவி பச்சையம்மாள் (46) மற்றும் வேம்பாயி(45), சதீஷ்(32), கன்னியம்மாள் (45) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை போலீசார் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article