உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாக கொண்டாட்டம்

4 months ago 13

வெலிங்டன்: நியூசிலாந்தில் 2025 புத்தாண்டு பிறந்தது. 2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இரவு 12 மணிக்கே புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில், கிரிபாட்டி [Kiritimati] தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் 2025 ஆம் வருடம் பிறந்துள்ளது. அதனை தொடர்நது உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று நியூசிலாந்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் இன்று தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.

The post உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article