உலகின் முதல் வீரர்... ரோகித்துக்காக காத்திருக்கும் வரலாற்று சாதனை?

14 hours ago 4

துபாய்,

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் ரோகித் 421 ரன்கள் எடுத்திருக்கிறார். இறுதி போட்டியில் அவர் 79 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், இந்த ஸ்டேடியத்தில் ஒரு நாள் சர்வதேச போட்டியில் 500 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

இதுதவிர, போட்டியில் வெறும் 4 ரன்களை எடுத்து விட்டால், ஸ்காட்லாந்தின் ரிச்சி பெர்ரிங்டனை முந்தி, ஒரு நாள் சர்வதேச போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம், ஏற்கெனவே ஐ.சி.சி.யின் அனைத்து வகையான போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இறுதி போட்டிக்கு பின்னர், ஒரு நாள் சர்வதேச போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக தொடர்ந்து ரோகித் நீடிப்பாரா? என்பது பற்றி பி.சி.சி.ஐ. முடிவு செய்யும் என கூறப்படுகிறது. 2027-ம் ஆண்டுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டிக்கான உலக கோப்பை தொடருக்கு நிலையான தலைமை வேண்டும் என பி.சி.சி.ஐ. எதிர்பார்க்கிறது.

ரோகித்தோ, தன்னிடம் இன்னும் கிரிக்கெட் கொஞ்சம் மீதமிருக்கிறது என நம்புகிறார். அதனால், அவர் ஓய்வு பெறமாட்டார் என தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இறுதி போட்டிக்கு பின்னர் தொடர்ந்து அவர் கேப்டனாக நீடிப்பாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க:  கிரிக்கெட் போட்டிகளில் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை படைத்த ரோகித் சர்மா

Read Entire Article