உலகின் மிக பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது: சர்வதேச நாணய நிதிய இயக்குனர் தகவல்

3 weeks ago 5

வாஷிங்டன்: உலகின் மிக பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதிய இயக்குனர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எப்) ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் பேட்டியளிக்கையில் கூறியதாவது: உலகின் மிக பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. 24-25 நிதியாண்டில் கிராமப்புற நுகர்வு மீட்சியுடன், சாதகமான அறுவடை நடைபெற உள்ள நிலையில், 24-25 நிதியாண்டில் வளர்ச்சி 7 % இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் 4.4 % குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24-25 நிதியாண்டில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், உணவு விலைகள் இயல்பான நிலையில் இருக்கும். மற்ற விஷயங்களை பொறுத்தவரை, தேர்தல்கள் இருந்தபோதிலும், நிதி ஒருங்கிணைப்பு பாதையில் உள்ளது. கையிருப்பு நிலை மிகவும் நன்றாக உள்ளது. மேக்ரோ அடிப்படைகள், பொதுவாக, இந்தியாவிற்கு நன்மை அளிப்பதாக உள்ளது. உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி ,டிஜிட்டல் உள்கட்டமைப்பாக இருந்தாலும் சரி சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். விவசாயம் மற்றும் நில சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்.கல்வி மற்றும் திறன்களை வலுப்படுத்துவது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post உலகின் மிக பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது: சர்வதேச நாணய நிதிய இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article