உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் மார்க் ஸக்கர்பெர்க்

3 months ago 19

நியூயார்க்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மார்க் ஸக்கர்பெர்க் முன்னேறினார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்தார். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன; அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க் வியாழக்கிழமையில் உயர்ந்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு முதலீடுகள்தான், மெட்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று மெட்டா பலமுறை கூறியுள்ளது. மேலும், செலவுக் குறைப்ப் திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டில் 21000 பணியாளர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மார்க் ஸக்கர்பெர்க்கை காட்டிலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 50 பில்லியன் டாலருடன் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளார்.

டாப் 10 உலக கோடீஸ்வர்கள் பட்டியல்

* எலான் மஸ்க் – 256 பில்லியன் டாலர்

* மார்க் ஸூகர்பெர்க் – 206 பில்லியன் டாலர்

* ஜெஃப் பிசோஸ் – 205 பில்லியன் டாலர்

* பெர்னார்ட் அர்னால்ட் – 193 பில்லியன் டாலர்

* லேரி எல்லிசன் – 179 பில்லியன் டாலர்

* பில் கேட்ஸ் – 161 பில்லியன் டாலர்

* லேரி பேஜ் – 150 பில்லியன் டாலர்

* ஸ்டீவ் பால்மர் – 145 பில்லியன் டாலர்

* வாரன் பஃபெட் – 143 பில்லியன் டாலர்

* செர்ஜி பிரின் – 141 பில்லியன் டாலர்

The post உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் மார்க் ஸக்கர்பெர்க் appeared first on Dinakaran.

Read Entire Article