
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பிடடாலி அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் ஆந்திர பிரதேச கிரிசோலா பகுதியை சேர்ந்த வியாபாரி வர்மா அரிசி வாங்கி வந்தார்.
இந்த ஆலையில் பலமுறை அரிசி வாங்கி விட்டு இவரும் இவரது கூட்டாலிம் பணத்தை உடனடியாக கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பின்பு பணம் தருகிறோம் என கூறி ரூ. 77.26 லட்சம் மதிப்பிளான அரிசியை வாங்கியுள்ளனர்.
திருப்பி பணம் செலுத்துவதாக கூறிய இருவரும் பணத்தை செலுத்தவே இல்லை. பணத்தை கொடுத்து பல நாட்களாகி சில ஆண்டுகளையும் கடந்தது. இதனால் ரூ.77.26 லட்சததை ஏமாற்றிய வியாபாரிகள் மீது கோலந்தாரா போலீசில் ஆலை உரிமையாளர் புகார் அளித்தார்.
இந்த நிலையில் புகாரின் பேரில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் மோசடி செய்த வர்மாவை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.