வாஷிங்டன்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி சர்வதேச அளவில் முடங்கியது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் இன்று நள்ளிரவில் திடீரென உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. மைக்ரோசாப்ட் சேவை முடங்கியதால் அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் 1ம போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.