உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா வர பாகிஸ்தான் அணி மறுப்பு

4 weeks ago 8

லாகூர்,

மகளிர் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் அணி மறுப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தான் செல்லவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டி துபாயில் நடைபெற்றது.

தற்போது இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை தொடர் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு போட்டிகளை வேறு நாட்டில் நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கை, துபாயில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Read Entire Article