உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி

13 hours ago 2

சாண்டியாகோ,

2026-ல் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . அந்த வகையில் நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் சிலி - அர்ஜென்டினா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா 1-0 என கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரஸ் 16-வது நிமிடத்தில் கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.உலகக்கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளி பட்டியலில், 34 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. 

Read Entire Article