உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்

3 months ago 20

புதுடெல்லி,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று டெல்லியில் 5 நாட்கள் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான டிராப் பிரிவில் இந்திய வீரரான ராஜஸ்தானைச் சேர்ந்த விவான் கபூர் 44 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 47 புள்ளியுடன் சீனாவின் யிங் குய் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில் இத்தாலியின் தம்மரோ கசாண்ட்ரோ (57 புள்ளி), கேப்ரியல் ரோசெட்டி (56 புள்ளி) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினர். இந்திய வீரர் அனந்த் ஜீத் சிங் நருகா (43 புள்ளி) வெண்கலப்பதக்கத்தை ருசித்தார்.

போட்டியின் நிறைவில் சீனா 5 தங்கம், 3 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்தியா 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 9-வது இடத்தை பெற்றது..

Read Entire Article