உலக மகளிர் தின விழா; மேயர் பிரியா ஏற்பாட்டில் நடைபெற்ற “தமிழ்மகள்” என்னும் மாபெரும் சொற்போரில் மாணவி துர்கா முதலிடம்!

7 hours ago 5

சென்னை: உலக மகளிர் தின விழா – 2025” முன்னிட்டு, மேயர் பிரியா ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் 18 கல்லூரிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற “தமிழ்மகள்” என்னும் மாபெரும் சொற்போரில் கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடெமியை சேர்ந்த மாணவி துர்கா முதலிடம் பிடித்து ரூ.1 இலட்சமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி மாணவி கயல்விழி இரண்டாம் இடம் பிடித்து ரூ.75,000 மும் மற்றும் காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி லிகிதா மூன்றாம் இடம் பிடித்து ரூ.50,000 மும் வென்று, பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி “உலக மகளிர் தின விழா – 2025” முன்னிட்டு, மேயர் பிரியா ஏற்பாட்டில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தமிழ் மகள்”என்னும் மாபெரும் சொற்போரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கல்லூரி மாணவிகளுக்கிடையே மாபெரும் சொற்போரில் 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திராவிட மாடல் ஆட்சியில் பெண்ணின உயர்வுக்காக ஆற்றிய மகத்தான பணிகளை எடுத்துக் கூறுகின்ற வகையில் 30 திட்டங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியை பேராசிரியர் முனைவர் பர்வின் சுல்தானா அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர். “தமிழ் மகள்”என்னும் மாபெரும் சொற்போரில் 1.செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவி சத்யா பிரவீன் “வையத் தலைமைகொள்” என்ற தலைப்பிலும், 2.பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஹெப்சிபா “கனவு மெய்ப்பட” என்ற தலைப்பிலும்,, 3.ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கீர்த்தி “வல்லினம் – பெண்ணினம்” என்ற தலைப்பிலும், 4.லயோலா கல்லூரி மாணவி மரியா “வல்லமை தாராயோ” என்ற தலைப்பிலும், 5.அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கே.சக்தியா“சிறகைவிரி எழு பற” என்ற தலைப்பிலும், 6.டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி மாணவி கயல்விழி “போர்த்தொழில் பழகு” என்ற தலைப்பிலும், 7.ஆர்.கே. நகர் அரசு கலைக் கல்லூரி மாணவி மகேண்வரி“அவள் மலரல்ல” என்ற தலைப்பிலும், 8.ஸ்டெல்லா மாரிஸ் மகளிர் கல்லூரி மாணவி கார்த்திகா ரஜினிகாந்த் “இலக்கே விளக்கு” என்ற தலைப்பிலும், 9.நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி மாணவி அஷிகா பாத்திமா “கடிகாரம் ஓடும்முன் ஓடு” என்ற தலைப்பிலும், 10.எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவி சந்தியா.கே “வானமே எல்லை” என்ற தலைப்பிலும், 11.காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி லோகித் “செயலே அழகு” என்ற தலைப்பிலும், 12.இராணி மேரி மகளிர் கல்லூரி மாணவி ரோஜா “பெரிதினும் பெரிதுகேள்” என்ற தலைப்பிலும், 13.செயிண்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி லட்சுமி பிரியா “புதிய களம்” என்ற தலைப்பிலும், 14.அண்ணா ஆதர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கவிபிரியா “மண் பயனுற வேண்டும்” என்ற தலைப்பிலும், 15.பக்தவச்சலம் மெமோரியல் கல்லூரி மாணவி கிரிஸ்டினா “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்” என்ற தலைப்பிலும், 16.அன்னை வயலெட் கல்லூரி மாணவி பிரியதர்ஷிணி “எட்டுத் திக்கும் உனக்கானது” என்ற தலைப்பிலும், 17.சோகா இகோடா கல்லூரி மாணவி தக்ஷின் நிஷா “அச்சம் என்பது இல்லையே” என்ற தலைப்பிலும் மற்றும் 18.கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி மாணவி துர்கா “பெண்ணின்றி அமையாது உலகு” என்ற தலைப்புகளில் சிறப்பான சொற்பொழிவுயாற்றினார்கள்.

இச்சொற்போரில் மேனாள் நீதியரசர் செல்வி கே.பி.கே. வாசுகி அவர்கள், மேனாள் நீதியரசர் திருமதி. எஸ். ஆனந்தி அவர்கள், இஸ்ரோ விஞ்ஞானி கே.தேன்மொழி செல்வி அவர்கள் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தலைப்பில் 3 நிமிடங்கள் சிறப்பாக சொற்போர் ஆற்றிய கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடெமியை சேர்ந்த மாணவி துர்கா முதலிடத்திற்கான ரூ.1 இலட்சமும், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி மாணவி கயல்விழி இரண்டாம் இடத்திற்கான ரூ.75,000 மும் மற்றும் காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி லிகிதா மூன்றாம் இடத்திற்கான ரூ.50,000 மும் வழங்குவதற்கு தேர்வு செய்து, பரிசுகள், பாராட்டு சான்றுகள் மற்றும் “தமிழ் மகள்” கேடயத்தையும் வழங்கினர். இச்சொற்போரில் கலந்துகொண்ட 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் அனைவருக்கும் பங்கேற்றமைக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இச்சொற்போரில் மேனாள் நீதியரசர் டாக்டர் எஸ் விமலா அவர்கள், சொற்பொழிவாளர் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள், Femi9 நிறுவனர் டாக்டர் கோமதி அவர்கள் ஆகியோர் பங்கேற்று மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கானா புகழ் இசைவாணி அவர்களும் மற்றும் 100 சதவீதம் பார்வை மாற்றுத்திறன் கொண்ட எஸ்.எஸ்.பிரியவதனா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சிறு வயதினிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாராட்டு பெற்ற சிறுமி வர்ஷா அவர்கள் பெண்களை போற்றும் விதமாக பேசி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மலேசிய மேனாள் அமைச்சரும் இன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், பிரபல பாடலாசிரியர் திரு.பா.விஜய், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ரவிச்சந்திரன், கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் திரு.தமிழன் பிரசன்னா, பகுதி கழக செயலாளர்கள் திரு.வி.சுதாகர், திரு.சொ. வேலு, 6வது மண்டலக் குழுத்தலைவர் திருமதி.சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.ராஜேஸ்வரி ஸ்ரீதர், திருமதி.சுதா தீனதயாளன், திருமதி.புனிதவதி எத்திராஜன், டாக்டர்.ஜி.சாந்தகுமாரி, திருமதி.சர்வஜெயா தாஸ், திருமதி.ஜி.வி.நாகவள்ளி, திருமதி.கே.சாரதா, திருமதி.டி.யோகபிரியா, திருமதி.எம்.தாவுத்பீ, திருமதி.பி.அமுதா, திருமதி.சி.ஸ்ரீதணி, திருமதி.லதா வாசு, திருமதி.எஸ்.தனலட்சுமி, திருமதி.ஆ.பிரியதர்ஷினி, திருமதி.மோ.பானுபிரியா, திருமதி.உஷா நாகராஜ், டாக்டர்.பு.பூர்ணிமா, திருமதி.கே.பொற்கொடி, திருமதி.எஸ்.உமா, திருமதி.பாத்திமா முசாபர், திருமதி.பி.சுமதி, திருமதி.எல்.ரமணி. திருமதி.ச.தமிழ்ச்செல்வி, திருமதி.ரத்னா லோகேஸ்வரன், திருமதி.ஹேமலதா கணபதி, திருமதி.கே ராணி, திருமதி.ச.பாரதி, திருமதி.ஏ.கமலா செழியன், திருமதி.எலிசபெத் அகஸ்டின், திரு.பரிதி இளம் சுருதி, வட்டச் செயலாளர் திரு.வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

The post உலக மகளிர் தின விழா; மேயர் பிரியா ஏற்பாட்டில் நடைபெற்ற “தமிழ்மகள்” என்னும் மாபெரும் சொற்போரில் மாணவி துர்கா முதலிடம்! appeared first on Dinakaran.

Read Entire Article