உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து

6 months ago 20

பாரிஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள் டவரில் உள்ள லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும் 2வது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், ஈபிள் டவர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கபட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் தீ விபத்தால் கவலையடைந்துள்ளனர். 

Read Entire Article