உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த பாண்டிங்

1 day ago 2

சிட்னி,

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 11-15 வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.

ஏனெனில் அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறை தென் ஆப்பிரிக்காவை விட வலுவானதாக உள்ளது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சவால் விடுத்துள்ளார்.இந்த போட்டிக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த அணி விவரம்,

1. உஸ்மான் கவாஜா, 2. மார்னஸ் லாபுசாக்னே, 3. கேமரூன் கிரீன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. டிராவிஸ் ஹெட், 6. பியூ வெப்ஸ்டர், 7. அலெக்ஸ் கேரி (வார), 8. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9. மிட்செல் ஸ்டார்க், 10. நாதன் லியோன், 11. ஜோஷ் ஹேசில்வுட்.

Read Entire Article