துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியும் ஆதிக்கம் செலுத்தி அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனானது.
அதனை தொடர்ந்து இந்த முறையும் சாம்பியனாக முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர்களில் தொடந்து சொதப்பி வரும் தென்னாப்பிரிக்கா அணியும் கோப்பையை முத்தமிட முனைப்புடன் இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இரு அணிகளின் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர். பயண இருப்பு: பிரெண்டன் டாகெட்.
தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.
The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியானது! appeared first on Dinakaran.