உலக சேவை தினத்தை முன்னிட்டு பள்ளப்பட்டியில் 500 மரக்கன்று நடும் விழா

3 months ago 15

 

அரவக்குறிச்சி, அக். 11: உலக சேவை தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் பல்வேறு இடங்களில் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் லயன்ஸ் கிளப் சார்பில் உலக சேவை தினம் கொண்டாடப்பட்டது. பசுமை பள்ளபட்டியாக மாற்றவும், மழைப் பொழிவை அதிகரிக்கவும் உலக சேவை தினத்தை முன்னிட்டு பள்ளப்பட்டியில் பல்வேறு இடங்களில் கிளப் தலைவர் பஷீர் அஹமது தலைமையில் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. வட்டார தலைவர் ரியாஸ் அலி, இயக்குனர்கள் அன்வர் அலி, ஜாகிர் உசேன் மரக்கன்றுகளை நட்டனர். கிளப்பின் உறுப்பினர்கள் அஜ்முல்லா, முகம்மது ஆசிப், ரியாசத் அலி, காஜா பஷீர் ஆகியோர் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கூண்டுகளை பெருத்தி களப்பணிகளை மேற்கொண்டனர்.

 

The post உலக சேவை தினத்தை முன்னிட்டு பள்ளப்பட்டியில் 500 மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article