உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக போக்கும் வகையில் கலந்தாய்வு கூட்டம்

1 week ago 2

குன்னூர்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குன்னூர் வெலிங்டன் பாளைய நிர்வாக அதிகாரி வினித் லோட் தலைமையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக போக்குவதற்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மென்ட் அலுவலக அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெலிங்டன் பாளைய நிர்வாக அதிகாரி வினித் லோட் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் மற்றும் வெலிங்டன் கண்டோன்மென்ட் 7 வார்டுகளுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஊர்தலைவர்கள், வெலிங்டன் காவல் துறையினர், கண்டோன்மென்ட் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது பொறுப்பு துணைத் தலைவர் மற்றும் கண்டோன்மென்ட் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்ட கூட்டத்தில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட பொது மக்கள் தங்களுடைய குப்பைகளை வாங்கும் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்கும் வேண்டும், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வார்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வருங்கால சந்ததிகளுக்கு தூய்மையான நகரத்தை விட்டு செல்வோம் என்று உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாக அதிகாரி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், கண்டோன்மென்ட் அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக போக்கும் வகையில் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article