உறவுக்கார வாலிபருடன் மகள் ஓட்டம்... மன வேதனையில் தாய் எடுத்த விபரீத முடிவு

2 months ago 12

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள ஒட்டங்காடு தெற்கு பெரிய தெற்குக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மனைவி விஜயலதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரெங்காசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது காதலருடன் ஓடி போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விஜயலதா தனது மகளை அழைத்துச் சென்ற அந்த வாலிபர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் விரத்தி அடைந்த விஜயலதா, அதே வீட்டின் முன்பு விஷம் குடித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ரெங்கசாமி மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக விஜயலதாவை பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயலதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவுக்கார வாலிபருடன் மகள் ஓடி போனதால் மன வேதனையில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article