உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் ஆலோசனை

4 weeks ago 5

பீஜிங்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2020 ம் ஆண்டு கிழக்கு லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பலனாக தொடர்பாக கடந்த அக்டோபர் 21ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் மட்டத்திலான 23வது கூட்டம் நேற்று பீஜிங்கில் நடந்தது. இதில், இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு நேற்று முன்தினம் சீனா சென்றடைந்தது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் சீனா சார்பில் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டார். இதில், லடாக் பிரச்னையால் தடைபட்ட இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

The post உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article