உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை கவர்னர் சீர்குலைக்க முயற்சிக்கிறார் - அமைச்சர் கோவி.செழியன்

4 months ago 14

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர். நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும்தான் தேர்வுக் குழுவை நியமித்தோம். மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன? எதில் தலையிட வேண்டும்? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத கவர்னர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4-வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் கவர்னர் பொறுப்புக்கு அழகல்ல.

தி.மு.க. அரசு அமையும்போதெல்லாம் உயர்கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால்தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம். இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் கவர்னர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறுக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article