உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதி

1 month ago 4

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்று அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் பாபுவின் பவுன்சர்கள், தனிப்படை போலீசார் ஆகியோர் ஊடகவியலாளர்களை விரட்டியடித்தனர்.

மேலும் நடிகர் மோகன் பாபு சில செய்தியாளர்களின் மைக்கை பிடுங்கி தாக்கிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் காயமடைந்த 2 ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை தாக்கியது தொடர்பாக மோகன் பாபு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் மோகன் பாபுவுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தந்தை தன்னை தாக்கியதாக மகனும், மகன் தன்னை தாக்கியதாக தந்தையும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.

The post உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article