மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் என்னும் இந்த நிறுவனம் பெர்காம்பூர் (Berhampur), போபால் (Bhopal), கொல்கத்தா( Kolkata) ,மொஹாலி (Mohali ) , பூனே( Pune ) ,திருவனந்தபுரம்(Thiruvananthapuram)மற்றும் திருப்பதி(Tirupati ) ஆகிய இடங்களில் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகிறது.
திறமையானஅறிவியல் ஆய்வு மனப்பான்மை கொண்ட இளம் பருவத்தினரை அடையாளம் கண்டு அவர்களது ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும் என்ற நல்ல நம்பிக்கையோடு இந்த நிறுவனம் பல்வேறு மேற்படிப்பு மற்றும் பயிற்சிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்குகிறது. பல்வேறுபடிப்புகள் மூலம் பட்டத்தை வழங்குவதோடு இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் ஆய்வு வெளியீடுகளுக்கு (Publications), காப்புரிமை (Patent) வழங்கவும் உதவிவருகிறது.
படிப்புகள் விபரம்
இந்த நிறுவனங்களில் பி. எஸ் -எம். எஸ்டிகிரி (டியூஎல்டிகிரி) (BS-MS (DUAL DEGREE)என்னும் பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பு 5 வருட படிப்பாகும். ஆனால், பி .எஸ். டிகிரி(BSDEGREE) என்னும் பட்டப் படிப்பு போபாலில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் என்னும் நிறுவனத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்தபடிப்பு 4 வருடபடிப்பாகும்
கல்வித் தகுதி.
இங்கு நடத்தப்படும் பி.எஸ்-எம்.எஸ் டிகிரி (டியூஎல்டிகிரி) BS-MS (DUAL DEGREE)மற்றும் பிஎஸ் டிகிரி(BS DEGREE) ஆகிய படிப்புகளில் சேர்ந்து படிக்க பிளஸ் டூ அல்லது அதற்கு தகுதியான படிப்புகளில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.
பிளஸ் டூ தேர்வில் உயிரியல் வேதியியல் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவை சேர்ந்த மாணவ மாணவிகள் குறைந்தபட்சம்55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். மற்ற பிரிவை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்கவேண்டியது அவசியமாகும்.
நுழைவுத்தேர்வு
இந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு கண்டிப்பாக ஐ .ஐ .எஸ் .இ. ஆர்ஆப்டிடியூட்டெஸ்ட்) ( ஐ. ஏ .டி). (IISER APTITUDE TEST) (IAT)என்னும் நுழைவு தேர்வு கண்டிப்பாக எழுதவேண்டும். இந்த தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையிலான(COMPUTER BASED) தேர்வாக அமையும். இந்தியா முழுவதும் பல்வேறு தேர்வுமையங்களில் இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும்.
நுழைவுத் தேர்வு மொத்தம் 240 மதிப் பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 60 கேள்விகள் நுழைவு தேர்வில் இடம் பெறும். உயிரியல் வேதியியல் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு பாடத்திலும் 15 கேள்விகள் இடம் பெறும். மொத்தம் மூன்று மணிநேரம் இந்த தேர்வு நடைபெறும். சரியான விடைகள் ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண்ணும், தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். பதில் எழுதாமல் இருக்கும் கேள்விகளுக்கு 0 (பூஜ்ஜியம்) மதிப்பெண் அளிக்கப்படும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெறும்
இட ஒதுக்கீடு
இந்த நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்களில் 15% பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் (SC), 7.5சதவீதம் பட்டியலின பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிறபிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (OBC-NCL )27 சதவீதஇடஒதுக்கீடும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PWD ) 5 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதார நிலையில் நலிந்தவர்களுக்கு (EWS)10% இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.
மாணவர்சேர்க்கை
பொதுவாக இந்த நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் தொடக்கம் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். நுழைவுத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும். மாணவர் சேர்க்கை ஜூலை மாதத்தில் தொடங்கப்படும்.