உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி பங்கேற்பு

7 months ago 33

சென்னை: ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., பங்கேற்க உள்ளார்.

இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதால், நேரில் பங்கேற்க இயலாது என்று அவரிடம் தெரிவித்தார்.

Read Entire Article