ஸ்பிக்நகர், ஜன. 23: தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரையிலான பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரையிலான பகுதியில் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் தொழிற்சாலைகள், ஷிப்பிங் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் தினந்தோறும் விபத்துகள் அரங்கேறுகின்றன. எனவே உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரையிலான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை மாநில அமைப்பாளர் பிரபாகரன் பட்டாணி கூறுகையில், தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முள்ளக்காடு வரையிலான பகுதிகளில் ஏராளமான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் அவசரமாக மருத்துவமனைக்கு செல்லும்போது கூட மிகுந்த அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
The post உப்பாற்று ஓடை- முள்ளக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.