கான்பூர்: உபி மாநிலம் கான்பூரில் ராமநவமியையொட்டி நேற்று முன்தினம் ஊர்வலம் நடந்தது. ஷோப யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நய் சதக் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, வீடுகளின் மாடிகளில் இருந்து கற்கள்,செங்கற்கள் வீசினர் என்று ஊர்வல ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கான்பூர் துணை போலீஸ் கமிஷனர் ஷரவன்குமார் சிங்,‘‘ ராம நவமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வீடுகளின் மாடிகளில் இருந்து கற்கள்,செங்கற்கள் வீசப்பட்டன என்று புகார் வந்துள்ளது. கல்வீச்சில் யாரும் காயமடைந்ததாக தெரியவில்லை. கற்கள் வீசிவிட்டு சிலர் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது வெறும்புரளி என தெரியவருகிறது. எனினும் இந்த புகாரை தொடர்ந்து கான்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’’ என்றார்.
The post உபியில் ராமநவமி ஊர்வலத்தில் கல்வீச்சு..? விழா ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு வெறும் வதந்தி என போலீசார் மறுப்பு appeared first on Dinakaran.