உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் மரணம்

3 months ago 16

ஐதராபாத்: டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருந்த ஜி.என்.சாய்பாபா (57), நக்சல் தொடர்பான வழக்கில் கடந்த 2014 மே மாதம் மகாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த 2017ம் ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கிடையே 2021 மார்ச் மாதம், அவரை பணியில் இருந்து கல்லூரி நிர்வாகம் நீக்கியது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் அவரை சிறையில் இருந்து விடுவித்தது.

கடந்த மார்ச் மாதம் சாய்பாபா சிறையில் இருந்து வெளியே வந்தார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஐதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

The post உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியர் மரணம் appeared first on Dinakaran.

Read Entire Article