உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் முன்னிலையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபெற்று, உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் கண்காணிப்பக நிர்வாகி ராஜி தலைமை தாங்கினார். கொத்தடிமைகளிலிருந்து மீட்கப்பட்டோருக்கான மறுவாழ்வு நல சங்கத் தலைவர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடபெருமாள், தன்னார்வலர்கள் சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொத்தடிமை மீட்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் தங்கவேல் அனைவரையும் வரவேற்றார்.
உறுதிமொழியில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு மீட்க தக்க நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். முன் பணம் பெற்றுக்கொண்டு பணியமர்த்துவதை தவிர்க்க வலியுறுத்துவேன். கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பழங்குடியின குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
The post உத்திரமேரூர் அருகே கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.