![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39284519-ani-20250213115548.webp)
மொராதாபாத் ,
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் தெர்மோகோல் உற்பத்தி செய்யும் பிரபல தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் தீ ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 7 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே தீயானது கிடுகிடுவென அடுத்தடுத்து பரவத்தொடங்கியது. சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இதில் தொழிற்சாலையில் பெரும் பகுதி முற்றிலும் தீயில் எரிந்து சாசமாகியுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீயை அணைக்கவும் மேலும் சேதத்தைத் தடுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.