
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பஹராய்ச் மாவட்டம் பைஹந்தா பகுதியில் அசிரி ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில், அரிசி ஆலையின் டிரையர் எந்திரத்தில் கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு 8 தொழிலாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். எஞ்சிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.