உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

3 months ago 13

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். வெடிப்பு காரணமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என கூறப்படுகிறது.

இதேபோல கடந்த மாதம் ஃபிரோசாபாத்தில் நடந்தது, அங்கு பட்டாசு ஆலையில் வெடித்ததால் வீடு இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் பலியாகினர்.மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.

The post உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article